இது வந்தால் இப்படித்தான்
கோழையின் கையில் வாள்கொடுத்து
கோட்டையை பிடிக்க ஆணையிடும்..
கோபுரம் மீதேறி புள்ளி வைத்து
கோலம் போட ஆசைவைக்கும்..
பகலினில் நிலவை ஒதுக்கிவிட்டு
இரவினில் ஏனோ தேடவைக்கும்..
தேடிய நிலவை காணுகையில்
விடியலைக் கண்டு வாடவைக்கும்..
பகலில் நிழல் விழ நடக்கையில்
பட்டம்பூச்சி தடவிக்கொடுக்கும்..
மெல்லிய பூவின் இதழ்களை விட
மென்மையானதாம்.
எனக்குள் மட்டும் எப்படி - இது
வன்மையனது?