மாஜி காதலி !
அருகில் அமர்ந்த அவளை
அன்றுதான் பார்த்தேன் ,
ஒரு நீண்ட இடைவெளியோடு !
மகிழ்ச்சி வரவில்லை !
மாறாய் மறைந்தது !
மனம் கசந்து அழுதது;
தோற்றுப்போன என் காதலை நினைத்து !
நேரம் சற்றே செல்ல ,
ஒன்றும் அறியா பாவை போல்
மாயமானாள் என் மாஜி......
ஒரு கோடி நிகழ்ச்சியில்
ஒன்றும் கிடைக்காது துக்கித்து நிற்கும்
நிலையில் நான் இருந்தேன் !
என் மாஜி காதலி தந்த காட்சி கண்டு !
இன்னும் காதலை தொடர்கிறேன் !
என் மனைவியோடு !