இறைவனின் தோல்வி...
ஆறறிவில்..
ஜந்தறிவாய் பிறந்த
என்
சித்தி மகள் குழந்தைக்கு
நான்
என்ன வாங்கி
கொடுப்பது...?
பொம்மைக்கும்
மசியவில்லை..
முத்ததிற்கு
வேறும் பார்வைதான்...
கை நீட்டினால்
தாள்ளாடிய கரம் நீட்ட
பெரியோர்களின்
கோஷம்..
கடைசியில்
ஜெயித்தது
என்னவோ
அந்த பரிதாப பார்வைதான்
அந்த வததிற்கு
இறைவன் சொல்லும்
பதில் தான் என்ன..?
எப்படியும் படைக்கும்
திறன் எமக்குண்டு
ஜாக்கிரதை
என
பயமுறுத்துகிறானோ
என்னவோ...?
ஊழல்..
பொய், புரட்டு,
ஆணவம்,
நயவஞ்சகம்
பேராசை,
பொறாமை..
ஆங்காரம்
இவற்றிக்கு ஏது குறை..?
கடைசியில்
தோற்றதும்
தோற்க்க போவதும்..
என்னவோ
இறைவன் தான்.....
மஹாதேவன்..