பூமா
இனிமேலும் நான் 
பொறுக்க மாட்டேன்
மானுடமே 
எச்சிலை என்மீது துப்பினாய் 
என் குழந்தைகள் 
என்று அன்போடு 
அரவணைத்தேன் 
ஆழ்துளையில் கிணறு
வெட்டும்போதும் என் மக்கள் 
தாகம் தீர்க்கட்டும் 
வழிவிட்டேன் 
பாரங்களாய் என்மீது கட்டிடங்கள் 
நின்றபின்பும் என் செல்வங்கள் 
வாழ தியாகமானேன் 
ரத்தம் சொட்ட சொட்ட 
கொலை செய்ய துணிந்து 
என்னை கறையாக்கி
அசுத்தப்படுத்துவாய்
அநீதிகள் தொடருவாய்  
இனிமேலும் பொறுக்க 
நான் தாய்தான் ஆனால்
என் மானுடம் சீர்கெட்டுப் 
போகவிடமாட்டேன் 
தொடர்ந்து கொண்டே 
இருப்பேன் களையெடுக்க 
நிலநடுக்கமாய்...........!!!!

