சடுகுடு ஆடவா

சடுகுடு என ஆடவா பாப்பா - நீ
சத்தம் போட்டு பாடவா
குடுகுடுவென ஓடிவா நான் சில
குற்றங்களை கூறவா
.....................
காலையில் கடும் தூக்கம் தூங்க குடாது நீ
கண்டபடி எல்லாம் பேசகூடாது
மாலையில் சோம்பி நீ இருக்க கூடாது - இருள்
மறைந்த உடன் பயிலாமல் இருக்ககூடாது

தெய்வங்களை வணங்க நீ மறுக்க கூடாது - தேடும்
செல்வங்களை வீணாக அழிக்க கூடாது
கள்ளத்தனம் என்றும் இருக்க கூடாது - நீ
கற்றவரை மதிக்காமல் இருக்க கூடாது

தேச பிதா காந்தியை போல் நீ வாழ்ந்திட வேண்டும்
நம் தேவைக்கு செலவு செய்து மகிழ்ந்திட வேண்டும்
நேசமாக அனைவரிடம் இருந்திட வேண்டும் - நாட்டை
நேசிப்பதில் உயிராய் வாழ்ந்திட வேண்டும்
[ சடுகுடு ]

எழுதியவர் : (31-Aug-12, 10:14 pm)
பார்வை : 120

மேலே