வெளியே...வெளியே....அகன்

வீதிக்குள் நுழைந்த
பயணங்கள்
முடித்துக்கொள்ள மறுப்பு
திசைகள் வெளிநடப்பு...!!

காதலுக்குள் நுழைந்த
உணர்ச்சிகள்
வரம்பிலடங்க மறுப்பு
கற்பு வெளிநடப்பு...!!

கடற்பரப்பில் நுழைந்த
அலைகள்
கரை மீள மறுப்பு
நிலம் வெளிநடப்பு...!!


நண்பர்களிடம் நுழைந்த
ஊடல்கள்
வெளியேற மறுப்பு
தோழமை வெளிநடப்பு..!!

கவிதைக்குள் நுழைந்த
தவறுகள்
வெளியேற மறுப்பு
அர்த்தங்கள் வெளிநடப்பு...!!!

வயோதிகத்திற்குள் நுழைந்த
ஆசைகள்
வெளியேற மறுப்பு
வாழ்க்கை வெளிநடப்பு...!!!

எழுதியவர் : agan (3-Sep-12, 12:46 am)
சேர்த்தது : agan
பார்வை : 190

மேலே