ஒப்பனையில் என் அன்னை !
பொது சொத்தை பாருங்கள்,
அது நமது முன்னோரின் வியர்வை,
அவ்வியர்வையை அழிக்க,
நமக்கென்ன உரிமை?
மாட மாடிகள் கண்ணெதிரே,
தமிழனோ ஒட்டுதிண்ணையில்,
ஒரு அறை வளாகத்தில்,
கூனி குறுகிய உறக்கத்தில்,
மது போதையின் மயக்கத்தில்,
எம் பிள்ளைகளோ ஏக்கத்தின்,
பிடிப்பில், இயலாமையின் விளிம்பில்,
கதை சொன்ன நடிகர்கள்,
எமக்கு வழி காட்ட வில்லை,
வேடதாரி கைகளில் தமிழன்னை,
எம் அன்னை உணவிடுவாள்,
கோடி பேருக்கு, அவள் குழந்தைகளுக்கு,
மதியவுணவு, தந்தைக்கு மது நினைவு,
இளம் பிள்ளைகளுக்கோ பற்றாமை,
கல்வியில், உடையில், உணர்வில்,
இளம் மங்கையருக்கும்,
முதிர்ந்தவருக்கும் கண்ணீர் நிலை,
வறுமை வெள்ளத்தில் தமிழகம்,
குரலற்ற தமிழர்கள் கோடி கோடி,
புரையோடிய புற்றுக்கு மருந்து கட்டு,
மட தமிழ் தலைவர்களின்,
தவிடு பொடி திருட்டு திட்ட கூட்டு,
போராட எண்ணினால் பொது சொத்தை,
அழிக்காதீர்கள். அவை நமது முன்னோரின்,
ஏழை பாட்டாளிகளின் காய்ந்த கண்ணீர்.