படைத்தலைவன் காதலி.

"''''''''''''''' படைமிரளும் தோள் கொண்ட
பருவமகன் வரவை எண்ணி
'''''''''''''''' பலகணியின் மேல் நின்றே - அப்
பாவை வழி பார்த்திருந்தாள் !
''''''''''''''' புரவி வரும் ஓசைதனை
மருவி நின்றே கேட்டிருந்து
''''''''''''''' பிறவி கொண்ட பாக்கியமென்
தலைவன் கைகள் சேர்வதென்றாள் ........


"'''''''''''' களிறொன்று பிளிறி நிற்க !
வாத்தியங்கள் ஒலி பரப்ப !
'''''''''''''' எதிரிப் படை சிதறடித்த - எழில்
ஏற்றமிகு வீரன் வந்தான் ,
'''''''''''''' படைத்தலைவன் பார்வை கண்டு
பரவசத்தில் தானும் நின்று
''''''''''''' தாளாத்தன் தூய காதல்
தாங்கிடவே ஓடி வந்தாள்...........


"'''''''''''' மையிட்ட வேல் விழியாள் !
மன்னவனின் மாரில் சாய்ந்து
'''''''''''''' மெய்மறந்து நின்று விட்டாள் - தன்
மேனி எங்கும் சிலிர்த்திடவே !
''''''''''''' படைவென்ற வீரன் கரம்
இடைபற்ற நோவு கொண்டும்
'''''''''''' இனம்புரியா சுகம் பரவ
இன்பவெள்ளம் கூடி நின்றாள் ........


"''''''''' கண்கள் நான்கும் பார்த்திருக்க
இதழ்கள் நான்கும் பூத்திருக்க
'''''''''' கலங்கிய அவள் கண்களினால் - கட
கடவென நீர் சொரிந்தாள் !
''''''''''' மலைமேவும் தோள் கொண்டான்
மங்கையவள் முகம் தூக்கி
''''''''''' கலங்கி நின்ற கண்ணீரை
கைவிரலால் துடைத் தெறிந்தான்......


"''''''''' வடக்கு நோக்கி சென்றவனே
வாள் வீச்சில் வென்றவனே !
''''''''''' மங்கை என்னில் மாலையிட்டு - உன்
மனையாள் என ஆக்கிவிடு ,
'''''''''' இத்தனைநாள் பிரிந்தி ருந்தேன்
ஏக்கம் கொண்டு தவித்திருந்தேன் !
''''''''''' வித்தகனின் முகம் கண்டு
துக்கமெல்லாம் தூரம் கொண்டேன் ......


"''''''''' மங்கை உனக்கு மாலையிட
மணநாளை குறித்தி ருந்தேன் !
''''''''''' மன்னவன் போர் ஆணைகண்டு - என்
மனதை நானும் மறைத்திருந்தேன் ,
''''''''''' கடல் தாண்டி சென்றாலும்பல
காத தொலைவில் நின்றாலும் !
''''''''''' கண்மணியின் பிரிவில் மனம்
கதியற்று நின்று விடும்.......


'''''''''''' கொடும் போர்கள் சென்றாலும்
கொடியோர் தலை வென்றாலுமெனை
''''''''''''' களவு செய்த காதலினை - மனம்
கனவில் கூட வென்றதில்லை .
'''''''''''''' மாண்டுபோன பகுதிப் படை
மண்டியிட்ட மிகுதிப் படை !
''''''''''''''' தலைசாய்த்து உறங்க விலையென்
தலைசாய்க்க தனங்கள் கொடு.......


''''''''''''' கலங்காதே கண் மணியே !
கண்ணாளன் வந்துவிட்டேன்
''''''''''''' சோலைமலர் பூக்கள் கொண்டு - மலர்
மாலை சூட நான்வருவேன் .
''''''''''''' மறுநாளே மண நாளாம்
மகிழ்ச்சி பொங்க காத்திருப்பாய் !
'''''''''''''' கலக்கங்கள் நீ களைந்து
காதல் மொழி பேசாயோ ?........................................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (3-Sep-12, 3:41 pm)
பார்வை : 496

மேலே