கல்வி - கிராமத்தானின் புலம்பல் பாடலாய்..
(நாட்டுபுற பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது)
கட்டண கொள்ளை மாறுமா
கல்வி ஏக்கம் தீருமா
சொல்லடி மீனாட்சி - நீ
சொல்லடி மீனாட்சி
எழுதி வைச்சு பழக்கம் இல்ல
எழுத்தறிவும் எனக்கு இல்ல
எட்டுக்கட்டி பாடுறேன் - நான்
உள்ளதைத்தான் சொல்லுறேன்
கேளடி மீனாட்சி - நீயும்
கேளடி மீனாட்சி
LKG படிக்கும் முன்னே
எர்கலபய வித்துப்புட்டேன் ...
எம்புள்ள நா பேசும்
இங்கிலிஷ்சு அழகா கேற்க...
கேளடி மீனாட்சி - நீயும்
கேளடி மீனாட்சி
சோறு போட்ட நிலத்தையெல்லாம்
பத்திரமா காத்து நின்னேன் ..
அத்தனையும் அடகு வச்சேன்
ஆரம்ப பள்ளி முடிக்கும் முன்னே...
பாரடி மீனாட்சி - நீயும்
பாரடி மீனாட்சி
அத்தனையும் நான் செஞ்சேன்
இத்தனையும் சகிச்சுக்கிட்டேன்
எம்புள்ள பள்ளி செல்லும்
அழகா தானே பாத்துநின்னேன்..
பாரடி மீனாட்சி - நீயும்
பாரடி மீனாட்சி
பிறந்தநாள் என்று சொல்லி
புது துணிய கட்டிக்கிட்டு
பள்ளிக்கூடம் போனானே
பள்ளிக்கூட பேருந்திலே....
சாயங்காலம் நேரம் ஆச்சு
எம்புள்ள வந்துடுவான் ..
ஆசையோடு நான் இருந்தேன் ...
கேட்டதெல்லாம் வாங்கித்தர ...
ஆவலோடு நான் இருக்க
எம்புள்ள காணலையே ....
செய்தி ஒன்னு வந்ததையா
உம் புள்ள செத்தான் என்று....
என்ன பாவம் செய்தேனோ - நான்
என்ன பாவம் செய்தேனோ
ஏற்றி விட்ட பேருந்தே
எமனாக ஆனதே ...
சோகம் இன்னும் தீரலையே...
துக்கம் இன்னும் மாறலையே..
சொந்தமெல்லாம் அழுகுது
என்புள்ள உடம்ப பாத்து...
இலவசமா கொடுத்தாக்கன்னு
எல்லாத்தையும் வாங்கி வச்சேன்
கல்விய மட்டும் வாங்கள...
என்னான்னு தெரியல...
ஏனடி மீனாட்சி - அது
ஏனடி மீனாட்சி