அம்மா

உயிருள்ள கல்லாக பிறந்தேன் நான் ,
என்னை சிற்பிபோல் செதுக்கினாள் அவள் !!
அனைவருக்கும் தெரியும் கல்லுக்கு வலிக்குமென்று ,
ஆனால் யாருக்கும் தெரியாது சிற்ப்பிக்கும் வலிக்குமென்று !!!
அவளுக்கு என் முதல் மதிப்பெண் பெரிதல்ல ,
ஆனால் முதலில் என் மதிப்புதான் பெரிது !!
அவளுக்கு என்னை திட்டி தீர்க்க தெரியாது ,
ஆனால் தீர்க்க தெரியும் என்னுடைய குட்டி குட்டி பிரச்சனைகளை!!!
அன்னையாக இருப்பதில் அவள் ஒரு இலக்கணம் ,
அதை கூறிக்கொள்வதில் எனக்கு உண்டு தலைகனம் !!

எழுதியவர் : சக்தி ஸ்ரீதேவி (3-Sep-12, 5:31 pm)
Tanglish : amma
பார்வை : 258

மேலே