நான்+நீ=நாம் 555

வாழ்க்கை.....

காலையில் உதித்து
மாலையில் மறையும்...

கதிரவனுக்கும்
கஷ்டம் உண்டு...

காலையில் மலரும் பூக்கள்
மாலையில் உதிர்வதும்...

மலர்செடிக்கு வருத்தம் தான்...

தினமும் உழைக்கும் நீ
வருந்தாதே...

மறையும் கதிரவன்
மறுபடியும் உதிக்காமல் இல்லை...

உதிரும் பூக்களை நினைத்து
மலசெடி மலராமல் இல்லை...

உன் வாழ்க்கை முழுவதும்
கஷ்டம் என்று நினைக்காதே...

உன் குருதியின் ஓட்டம்
நிற்கும் வரை...

நிச்சயம் நீ வெல்வாய்
உலகை.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (3-Sep-12, 8:40 pm)
பார்வை : 200

மேலே