பூந்தோட்டம்

தோட்டம் ஒன்றில்
வந்து இறங்கிய
ரோஜாக்கன்றுகள் பல

அதை தண்ணீரை ஊற்றி
நல்ல உரம் இட்டு
நிழலும் வெயுலும்
பதமாகப் பார்த்து

கண்ணும் கருத்துமாய்
எண்ணும் எண்ணங்கள்
பேச்சில் மட்டுமில்லை
செயலிலும் உண்டு என
கவனமாய்க் காத்திருந்து
வளர்த்துவிட்ட நிலையில்

மொட்டுக்கள் ரோஜாக்களாக
பட்ட பாடுகள் மறந்து
பூக்கும் பூக்களிலே
சந்தோசமும் நிம்மதியும்
ஒருசேர கண்டுணர்ந்து

மீண்டும் அடுத்ததொரு
ரோஜாக் கன்றுகளை
எதிர்பார்ப்பவர்களைப்
போன்ற

ஆத்மார்த்தமான ஆத்மாக்கள்
ஆசிரியர்கள் !!!!!!

எழுதியவர் : (4-Sep-12, 9:59 pm)
சேர்த்தது : KS அம்பிகாவர்ஷினி
பார்வை : 192

மேலே