இளங்கவி

கவிதை ஆடை நெய்ய
சொல் எனும்
நூல் வேண்டும்

நடை எனும்
வண்ணம் வேண்டும்

எண்ணம் எனும்
நெசவு வேண்டும்

வேண்டியதெல்லாம்
சேகரிப்பதற்குள்

என் கருத்துக்கள்
பிறரின் கவிதை ஆடைகளாக
பிரசுரித்து
விற்கப்பட்டு விடும் .

எழுதியவர் : ஏகலைவன் (5-Sep-12, 9:18 pm)
பார்வை : 129

மேலே