என் நீதிமன்றத்தின் வாதங்கள்
கனம் பொருந்திய நீதிபதி அவர்களே!!!!
என்னிடமும் சில வாதங்கள் உண்டு !!
உடலை விற்கும் பெண்- விலைமாது
அதற்க்கு தண்டனையும் உண்டு
அவளுடன் உடனிருந்து
சுகம் அனுபவிக்கும் ஆண்கள்?????
திருடியவன் -மனிதன்
திருடப்பட்டது -ஆடு
ஒன்றுமே அறியாத அந்த ஆடு
திருட்டு ஆடு
ஆகா!!!! என்ன ஒரு வழக்காற்று!!!!
சிறந்த படம் -நூறு நாள் ஓடியது
பாராட்டு, புகழ், மாலைகள் -நடிகருக்கு
படம் பத்து நாள் கூட தாண்டவில்லை
இகழ்ச்சி, இழிசொல் கணைகள் -இயக்குனருக்கு
அடடடா!!!! என்ன ஒரு நீதி !!!
ஆசை காட்டி பெண்ணுக்கு மோசம் செய்தான்
ஆணுக்கு தண்டனை -முற்றும் நியாயமே
ஆணுக்கு ஆசை காட்டி மோசம் செய்தாள்
அப்படியான பெண்ணுக்கு??????
மருத்துவமனையில் ஆயாம்மா
ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கி
அவசர கதியில் தண்டனை அனுபவித்தாள்
எங்கள் ஊர் அலைகற்றை , நிலக்கரி வழக்கெல்லாம்
முடிவுக்கு வருமா????
என்ன ஒரு நீதி சமத்துவம்!!!!???
அய்யா நியாயம் தெரிந்த நீதிமான்களே !!!
எனக்கு இதற்கு ஒரு நீதி வழங்குங்களேன்!!!