வரமே எனக்கு சாபமானதால் ........
வேற்றார்தம் விருப்பம் போல - என்
வார்த்தை வரம், அவளை விடுத்து நான்
வரிவரைய விழைந்ததன், விளைவரிவீரோ ??
வார்த்தை தேசமதை விட்டு - வெளியே
வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்டு
வார்த்தை வரட்சியினில்,வரண்டு விரிந்த
வெட்டவெளியினில் கட்டிவைத்ததுபோன்ற
விகார வலிகொண்டதை என் சொல்ல ?
வேற்றார்தம் விருப்பம் வெற்றிபெற
வம்சாவழியாய், பிள்ளை வளம் இல்லாதவர்
வீட்டில், இட்டிருக்கும் தொட்டில் போல
வார்த்தை குழந்தைகள், விளையாடா குறிப்பேடு
இருந்தும் அரைவிருப்பதொடு - வரிகள்
பதிக்கின்றேன் , செயற்கை கருவுற்றாவது
வரமே எனக்கு சாபமானதால் .......
சுவரில்லா சித்திரங்களாய் ...
சுவையில்லா சக்கரையாய் ....
அழகில்லா இயற்கையாய் .....
அளவில்லா அளவுக்கோலாய் .....
தேனில்லா தேன்கூடாய் ............
விழிகளில்லா பார்வையாய் ......
வாசமில்லா மலர்களாய் .....
அவளில்லா என் வரிகள் .
வரமே எனக்கு சாபமானதால் ........