எங்கே காதல்
ஒற்றை பார்வையில் விதைந்த காதல்
ஒரு முறையேனும் மீண்டும் காண
கண்கள் கொள்ளும் காதல் !
ஒரு நொடி தன்னை கடந்து போகும்
சிலிர்புக்காக கால்கள் கொள்ளும் காதல் !
ஒரு துளி புன்னகையில் சில நொடிகள்
மூச்சை விட மறக்கும் இதயம் கொள்ளும்
காதல் !
காதலரின் பெயர் கொண்ட பேரையும்
நேசம் கொள்ளும் காதல் !
கண்டும் காணாமல் நண்பர்களிடம்
கதை பேசுவதை போல பிடித்த குரலை
சுவாசித்து காதுகள் கொள்ளும் காதல் !
இன்று !
கைபேசியில் பேசி பேசி பழுதான
காதுகள் !
குறு செய்திகளை அனுப்பியே தேய்த்து போன
விரல்கள் !
கல்யாணம் என்றாலே விரண்டு ஓடும்
கால்கள் !
காதலி அருகில் இருக்கும் போது இன்னொரு
அழகு பெண்ணை ரசிக்க முடியாமல் தவிக்கும்
கண்கள் !
ஒட்டி கொண்டு பயணிக்கும் காதலரை
சுமந்து செல்லும் இருசக்கர வாகனம் !
கடற்கரையில் காதல் என்னும் பெயரில்
நடக்கும் நாடகங்களை பார்க்கும் கடல் !
இவையெல்லாம் குமுறி அழுது கேட்கும் கேள்வி !
எங்கே காதல் !