தன்னம்பிக்கை

எவ்வளவு தான் இன்னும் செய்ய முடியும் என்று தந்தையும் சுறகூடும் !

இவ்வளவுதான் முடியும் என்று உறவுகள்
கைவிரிக்க கூடும் !

அவ்வளவும் என்ன ஆச்சு? அன்று மகனும்
கேட்கக்கூடும் !

இவ்வளவுதானா முடியும் ? மகளும் வந்து
நிற்க கூடும் !

எத்தனை கஷ்டங்களை சுமப்பது என்று இதயமும் கலங்க கூடும் !

இத்தனை இருந்தும் நிம்மதி இல்லையே என
செல்வந்தர் நினைக்க கூடும் !

ஏன் இந்த வேதனை என்று
பலர் நோக கூடும் !

எதற்காக எனக்கு மட்டும் இப்படியென்று
மனங்கள் கலங்ககூடும் !

எங்கே இதன் தீர்வுகள் என்று கால்கள்
விடியலை தேடி ஓட கூடும் !

இப்பொழுது விடிந்துவிடும் என்று மனங்கள்
தேற்றி கொள்ள கூடும் !

எத்தனை கேள்வி கணைகள் வந்தாலும்
அதை அழகாய் தன்னுள் நீந்த செய்யும் வானம்தான்
தன்னம்பிக்கை !

எழுதியவர் : குல்ஷன் (9-Sep-12, 8:36 am)
சேர்த்தது : gulshan.s
Tanglish : thannambikkai
பார்வை : 128

மேலே