உரிமை...!!!

எதிரிகள் கொக்கரித்து
ஏழனமாய் - நம்மைப் பார்த்து
முற்றாக முடித்து விடலாமென
முட்டாள்களாய் சிந்தித்தனரோ...?

வயிற்றுப் பசியானாலும் - நம்
உரிமைப்பசியே மெய்ப்பசியென்று
ஊமைகளாய் இருப்பினும் - நம்
உண்மைகள் ஓயவில்லை...!!!

வேடிக்கை பார்ப்பதும் - சில
வேதனைப் பேச்சுக்களும்
விந்தையுலகமிதில் - ஓர்
வியப்பற்ற செயல்தானே...!

சோகங்கள் தீண்டினாலும் - எம்மை
சுமைகளே சுட்டெரித்தாலும்
சில வேளை மட்டுமே உறங்கி
பலநாள் விழித்திருப்போம்...!!!

நவராத்திரியென்று எண்ணி
நயவஞ்சகக் கூட்டம் – எம்மை
நாய்களாய் மாறிக்கடிக்க – நீ
வேடிக்கை பார்ப்பது நியாயமா?

சிந்தனையாளன் எண்ணங்கள் – தினமும்
சிவராத்திரியென்று ஏனின்னும்
சீறித்திரியும் புல்லுருவிகளின்
சிந்தனையில் பூக்கவில்லை…!

வேண்டாம் வேண்டாம் – எங்களை
சித்திரவதைப் படுத்த வேண்டாம்…!
வேண்டும் வேண்டும் – எங்களின்
காப்புரிமை வேண்டும்…!

செந்நிறச் சிவப்பாய் – எம்
செங்குருதி வெளியாறலாம்…!
செம்மையாய்த் தாயூட்டிய – தாய் மண்ணூட்டிய
தூய்மைக் கொள்கை வெளியேறலாமா?

போதனை ஒப்பித்த புத்தனும்
வேதனை நீக்கிய காந்தியும்
சோதனை நிறைந்த மண்ணில்தான் - தம்
வாழ்வினை செம்மையாய்ச் செலுத்தினான்…!!!

பிறப்புரிமை தந்து – உன்
பிறவிப்பயன் முடித்து – நீ
கடைவழிக்குச் சென்றுவிட்டால்
உன் தலைமுறை சிறப்புற்றுவிடாது தோழா…!

உன் பின்னுமொரு சகாப்தம்
வழியின்றித் திழைக்க – நீ
ஒருபோதும் ஆளாகாதே – என்பதை
ஒரு கணமும் மறவாதே…!

எழுதியவர் : கவியறியாக் குழந்தை (10-Sep-12, 6:48 am)
பார்வை : 150

மேலே