சீரியசாய்....இது கவிதை இல்லை.

என்னுடைய அறைக்குள்....

எதன் மேல் மோதுகிறோம்
எனக்கூடத் தெரியாமல்
வேக...வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது
இந்த எறும்பு.

விரலால் நிறுத்தி...
ஆசுவாசப்படுத்தினேன்.

"என்னைத் தடுக்காதே!"....
என்று ஆக்ரோஷமாய் சீறியது
குட்டி எறும்பு.

"என்ன! இத்தனை கோபம்!
நக்கீரனை எரித்த மூன்றாம் கண் தெரிகிறதே?"
என்றேன்.

"பேசாதே! திரும்பிப் பார்!"...என்றது எறும்பு.

திரும்பினேன்...
தயக்கமாய் ....தொலைவில்...
"டாஸ்மாக்"கிலிருந்து வெளிவருபவனைப் போல் தளர்ந்து வந்து கொண்டிருந்தது இன்னொரு எறும்பு.

"இந்தப் பொறுக்கி என்னை ரொம்ப நாளாய்
follow ....பண்ணித் தொல்லை பண்ணுகிறான்..
நேற்று...
நான் உன்வீட்டுக் கோலத்தின் அரிசி மாவு
இழுத்து வருகையில்...
திடீரெனக் குறுக்கே புகுந்து...
ஒரு தும்பைப் பூவை நீட்டி...
"ஐ லவ் யூ! " சொல்லிவிட்டான் ...பன்னாடை! என்றது.

இன்னமும்...
சீற்றம் தணியாத குரலுடனும்...
கோப மூச்சுடனும்....

"திக்கு வாய்ப் பயல்....
தீவட்டிப் பயல்...
ஊர் சுற்றி...திண்ணை தூங்கி..
முட்டைக் கண்ணன்...
கண்ணாடியே பாக்காத கருமம்...
கோண மண்டைக்கு நான் வேணுமாம்!
ஹூம்! " என்று கிறீச்சிட்டது பெருமூச்சுடன்.

பின் சில நொடிகள் கழித்து சிலிர்ப்புடன்...
மயங்கும் குரலில்...

"என் கனவில்...
கருப்பாய் அழகாய் இருக்கும்
கட்டெறும்புக்குத்தான் இடமுண்டு...
நீ கூட...
எனக்கு செகண்ட் சாய்ஸ் தான்!" என்றது.

தலை கிறு கிறுத்து...
"அய்யய்யோ! வேணும்னா...
என்னை ஒரு கடி..கடிச்சுக்கோ!
ஆளை விடு...அப்பாலே!..."
என்று சொல்லிவிட்டு...
எஸ்கேப் ஆகி வந்து விட்டேன்...
மயக்கம் தீராமல்.

எழுதியவர் : rameshalam (10-Sep-12, 12:31 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 239

புதிய படைப்புகள்

மேலே