எனக்கு அது கவிதை உங்களுக்கு

எதுவுமே எழுததெரியாத நான்
எதோ ஒன்றை கிறுக்கி வைத்திருக்கிறேன்
எனக்கு அது கவிதை
உங்களுக்கு

அர்த்தங்கள் இருக்கிறதா இல்லையா
தெரியாது
அறியாத சொல்லை நான் கோர்கவில்லை
தெரியாத பொருளை நான் கூறவில்லை
விளங்குவதற்குதான் எழுதுகிறேன்
அது எனக்கு கவிதை
உங்களுக்கு

எனக்கு திருப்தி தருகிறது
எனக்கு அர்த்தங்கள் புரிகிகிறது
சொற்களை கட்டி இழுத்து
சேர்த்திருக்கும்
சொல் கூட்டதுக்கு
என்ன பெயர்வைப்பது கவிதையா?
இது என்ன ?

ஒவொரு வீரரும் அணிவகுத்து நிற்கின்றது போல்
ஒவொரு எழுத்துகளும் நிக்கிறது
ஒவொரு அணிகளும் சேர்ந்த படைகள் போல்
ஒவொரு வசனங்களும் சேர்ந்த
கூட்டமாய் அர்த்தங்கள் தர
என் மொழிக்குள் ஒரு போர்
அது கவிதையா?
சொல்லுங்கள் நீங்கள்தான்
நடுவர்கள்
இதற்கு என்ன பெயர் வைப்பது?

எதுவுமே எழுததெரியாத நான்
எதோ ஒன்றை கிறுக்கி வைத்திருக்கிறேன்
எனக்கு அது கவிதை
உங்களுக்கு

எழுதியவர் : கிருஷ்ணா (10-Sep-12, 12:06 pm)
பார்வை : 143

புதிய படைப்புகள்

மேலே