அரசு அதிகாரிகளின் உறுதிமொழிகள்

கடமையை செய்வதே
எங்கள் பணி!
கையூட்டு கொண்டு
வராதே இனி!

கடமையை செய்ய கிடைக்குது
கைநிறைய சம்பளம்!
கடமையை மீறிட எதற்கு
கரை படியும் கிம்பளம்!
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு இனி
கொடுக்கப் போவதில்லை
வரவேற்பு கம்பளம்!

நாங்கள் அரசாங்கத்தின்
முக்கிய அங்கம்
நாட்டுப் பற்றில் எங்களுக்கில்லை
சிறிதும் பங்கம்
நாட்டை கெடுக்கும்
நோட்டுப் பேயை
அனுமதியோம் கொஞ்சம்

கடமையை செய்ய
ஆணையிடுவதில்
அறிவுறுத்துவதில்
பொது மக்களும்
எங்களுக்கு மேலதிகாரி தான்

உங்கள் வரிப் பணமே
எங்கள் வயிற்றை நிரப்புது தினம்

கைகால் இழந்தவன் கூட
உழைத்து உண்ணுகிற
நம் நாட்டில்
படித்து பட்டம் பெற்று
பதவியும் பெற்று
லஞ்சம் வாங்கி உண்ணலாகுமோ.?
அய்யோ..வெட்கக் கேடு

வீட்டுப் பற்றினால்
லஞ்சம் வாங்கி
நாட்டுப் பற்றை
விற்கும் அதிகாரிகள்
நாங்களில்லை

லஞ்சம் என்ற சொல்லைக் கூட
சொல்வதற்கு நாங்கள்
வெட்கப் படுகிறோம்

அன்பளிப்பு என்ற பெயரில்
அளித்தாலும் அதையும்
வெறுக்கிறோம்

கடமையை செய்
லஞ்சத்தை எதிர் பார்க்காதே
இது தான் எங்கள்
மந்திரம்

லஞ்சம் இல்லாத
இந்தியா
இது தான் எங்கள்
லட்சியம்.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (11-Sep-12, 8:14 am)
பார்வை : 185

மேலே