கூடங்குளம் ஆபத்து அல்ல

குளத்தில் கல் எறிந்தால்
மீன்கள் செத்துபோகும்
கூடம் குளத்தில் கல் எறிந்தால்
மின்சாரம் அற்றுபோகும்

அறிவியல் ஆபத்து என்றால்
அகிலம் வளராது
அணு ஆபத்துஎன்றால்
அகிலமே இயங்காது

விலைபோன ஒரு கூட்டம்
வினாக எதிர்க்கின்றது
விருப்பம் இல்ல மீனவரை
விலைபேச பார்க்கின்றது

கரை தேடும் மீனவர்கள்
விடை தேடி நிற்கின்றனர்
அறிவார்ந்த மக்களே
அணிவகுத்து செல்லுங்கள்
ஆபத்து அணுஉலை அல்ல
அந்த கூட்டம்தான் என
அடித்து சொல்லுங்கள்
அறிந்து கொண்ட அர்த்ததுடன்
மீனவர்கள் கலைந்து செல்லட்டும்
கட்டுமரம் ஏறட்டும்

எழுதியவர் : (11-Sep-12, 8:12 am)
பார்வை : 185

மேலே