தந்தையின் சோகங்கள்
நானும் பிறந்தேன் வளர்ந்தேன்
என்றில்லாமல்
என் வாழ்வுக்கு ஆதாயமாய்
நீ பிறந்தாய்
அந்நொடி இவ்வுலகமே
என் வசமானது
நீ பிறந்த மறு நொடி உன்னை
பார்த்த ஒரு பார்வை
ஏதோ என்னைப் பிரிந்து போன
சொந்தங்கள் வந்தனவாய்
சந்தோசத்தில்...............................
நியும் வளர்ந்தாய்
என்னை பார்க்காத ஒரு நிமிடம்
உனக்கு நிமிடமல்ல
உன்னை பார்க்காத ஒரு நிமிடம்
எனக்கு நிமிடமல்ல
என்று சந்தோசத்தில் இருந்த எனக்கு...........
நியும் ஒரு அதிர்ச்சி தந்தாய்
அப்பா நான் இல்லாமல் இவரில்லை
இவரில்லாமல் நான் இல்லை என்றாய்
அந்நிமிடம் ஏதோ என்னை விட்டு .......................
உனக்கு எதை எப்படி செய்ய வேண்டும்
என்று தெரிந்த எனக்கு
உனக்கு ஒரு ஆடவரை பார்க்க
தகுதியில்லை....................
என் சந்தோசத்தை பாரமல் நான்
உன்னை வளர்த்தேன்
அனால் நீயோ!
உன் சந்தோசம் பெரிதென்றாய்
என் வாழ்வு நிறைவு பெற போகிறது
இனி உன் வாழ்வு ஆரம்பமாகிறது
உன் சந்தோசத் தருணங்களில்
என்னை நினைக்காவிட்டாலும்
உன் சோகத் தருணங்களில்
அப்பா என்று நினைக்கிற
ஒரு வார்த்தை போதும்...........................