!!!===(((அழத்தெரியாதவர்கள்)))===!!!

ஓயாமல் உழைத்து
ஓடாக தேய்ந்து
ஒரு பயனும் இல்லாமல்
ஓட்டாண்டியானபின்பும்...

நாராக கிழிந்து
நரம்பெல்லாம் அறுந்து
நற்கதி இல்லாமல்
நாசமாய் போனபின்பும்...

வறுமையில் வறண்டு
வாழ்க்கையே இருண்டு
வழியொன்று இல்லாமல்
வக்கற்று போனபின்பும்...

வம்பில் விழுந்து
வலியில் துடித்து
வசந்தமே இல்லாமல்
வதங்கி போனபின்பும்...

மானத்தை இழந்து
மனதிற்குள் அழுது
மகிழ்ச்சியே இல்லாமல்
மண்ணாகி போனபின்பும்...

அவமானம் சுமந்து
அடிமையாய் கிடந்தது
ஆதரவு இல்லாமல்
அருகதையற்று போனபின்பும்...

கோடையில் காய்ந்து
கொடுமையில் நலிந்து
கொள்கையே இல்லாமல்
கோவணத்தை இழந்தபின்பும்...

எல்லோரையும் நம்பி
எல்லாத்தையும் தொலைத்து
எதுவுமே இல்லாமல்
ஏழையாகி போனபின்பும்...

கனவுகள் உடைந்து
கண்ணீரில் நனைந்து
கைத்துணை இல்லாமல்
கடல்தாண்டி கிடந்தபின்பும்....

என்னைமாதிரி
அழத்தெரியாதவர்கள் எல்லாம்
நிம்மதியாக வாழ்வதாக - பலர்
நினைத்துகொண்டு இருக்கிறார்கள்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (11-Sep-12, 3:31 pm)
பார்வை : 527

மேலே