உன் ஸ்பரிசம்

தனிமை எனை கவ்வும் போதெல்லாம்

உன்னிடம் வந்து நிற்பேன்

விழி துடைத்து, கரம் பற்றி

நானிருக்கிறேன் என ஆறுதல் சொல்வாய்...

இப்போதெல்லாம் தனிமைகளில்

உனை தேடி வருவதில்லை

கை விரித்து பார்ப்பேன்

என் உள்ளங்கை ரேகையோடு

உழன்று கொண்டிருக்கும் உன் ரேகைகளும்

எழுந்து தைரியம் சொல்கிறதடி!!!

ஸ்பரிசத்தால் என் உயிர் வருடிய தேவதை நீ!!!

எழுதியவர் : Revathi (11-Sep-12, 6:31 pm)
பார்வை : 341

மேலே