காத்திரு...காத்திரு...அகன்

அரங்கேற்றம் அமர்க்களமாக
தொடங்கி நடந்துக் கொண்டுதான்
இருந்தது...

ஆலாபனை முடித்து
ஆரோகணம் அவரோகணம்
கடந்து....
முடிப்பு நோக்கியே பயணமாய்
ராகங்களும்...தாளங்களும்...

தப்புத் தாளங்களும்
சுருதி பிசிறுகளும்
கண்ணாமூச்சு ஆட்டம்
சற்றே......

சலங்கைகளும்
சங்கதிகளும்
ஏன் காணவில்லை...
கால்களின் விரல்களுக்குள்
தொடங்கியது யுத்தம்...

தாளமும் சுருதியும்
தாங்களாகவே விடுப்பு
எடுத்து விட்டிருந்தன...
அரங்க்கத்திடம் கூறாமலே....

'தாளத்திற்கும் சுருதிக்கும்
சங்கதிகளுக்கும்
விடுமுறை...யார் அளித்தது....?'

முழக்கங்கள் முகிழ்ந்தன
ஆலாபனைக்குள்ளும்
சங்கீதங்களுக்கும்.......

அரங்கேற்றம் தொடருமா...??

"என்ன உடம்பு இது
உப்பு ,சர்க்கரை ,இரத்த அழுத்தம் ,
கொழுப்பு...."

உடல்
கேட்டது...
"ஏன் உங்களுக்கு இல்லையா
விடுப்பு... "

உயிரிடம் கேட்க வேண்டுமாம்...

நான் சொன்னேன்
அன்றியும்
உயிரிடம்...
"என் கவிதை முடியும் வரை
காத்திரு ,உயிரே..
இருக்கட்டும் இவை என்னுள்ளே..."

உயிர் கேட்குமா...??I

எழுதியவர் : AGAN (12-Sep-12, 8:22 pm)
பார்வை : 181

மேலே