தாம்பத்யம்....!

கைகளிரண்டும் இணையவேண்டும்
இதயங்களிரண்டும் இடம்மாற வேண்டும்!

எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு
எல்லை இல்லாத அன்பைக் கொடுக்க வேண்டும்!

இடைவிடாத நெருக்கம் வேண்டும்
விட்டுக்கொடுக்கும் மனம் வேண்டும்!

கோபத்திற்குப் பின் வரும்
கொஞ்சலில் கூடுதல் சுகம்!

வாலிபத்திற்கு வயதில்லை
வருடல்களிலும் சுகம் குறைவதில்லை!

புரியாமல் புரியும் சுகங்கள்யாவும்
புரிந்தபின் பூரிப்பாய் தேகத்தில் தங்கும்!

தாம்பத்தியத்தில், தான் திருப்தியடைவதை விட
எதிர்த்தரப்புக்கு திருப்தி தரவேண்டும்!

இவையனைத்தும் இருபாலருக்கும்,
பெண்ணே உனக்கு மட்டும் இரண்டுவரிகள் சொல்ல ஆசை,

மோகதாகம் அடங்கும் வேளையில்
உன் நகை தாகத்தை விதைக்காதே.......!

எழுதியவர் : நா.வளர்மதி. (15-Sep-12, 1:09 pm)
பார்வை : 487

மேலே