பிரிவு...............
தேடிவந்த நட்பு தோற்றுவிட்டதை எண்ணி
நாம் பழகிய நாட்களை நினைக்கையில்
என் வார்த்தைகளெல்லாம் சிறையிடப்பட்டன
பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வரும் கண்ணீர்த்துளிபோல் -இதுவரை
சிறையிருந்த இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய ந்ம் நட்பையெண்ணி
பிரியம் பிரிந்து விட்டது
பாசம் பொய்த்து விட்டது
நேசம் வேசம் கலைந்து விட்டது
நிம்மதி நெடுந்தூரம் போய்விட்டது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்று விட்டது