குயில்களும் மயில்களும்

குயில்களையும்
மயில்களையும்
அடைகாத்த கிராமத்தை
எட்டிப்பார்க்கிறேன் ......

நினைவுகளின் உரசலில்
நவுத்துப்போன தீக்குச்சியாய்
இளம் பருவத்து சம்பவங்கள் ....!

கனவுகளில் காணாமல் போன
கிராமத்து காதலியை
முகங்களில் தேடும்
முயற்சியில் நினைவுகள்....!

அடைகாத்து வளர்த்த
குயில்களும் மயில்களும்
வரதட்சணை பருந்தோடு
வெளியூரில் மானாட மயிலாட ...

இன்றைய
குயில்களும் மயில்களும்
அடைகாக்கா யாருமில்லாமல்
அங்கும் இங்கும் திரிகின்றன ....!

நினைவு இமை ஊசிகள்
விழிகளை பதம் பார்க்க ....

செவிகள் மட்டும்
தென்றலின் தாலாட்டுக்காக
முனகி கிடக்கிறது
தொட்டில் குழந்தையாய் .....!

மீண்டும் ஓர்முறை
பூக்க வேண்டும்
தொலைந்து போன கிராமத்து
நினைவுகளை அடைகாக்க....!

எழுதியவர் : வெற்றிநாயகன் (15-Sep-12, 9:48 pm)
பார்வை : 260

மேலே