சன்னல் ஓரம்

சன்னல் ஓரம் பஸ்சில்

நடந்து சென்ற பாதை
ஓடி ஆடிய மைதானம்
படித்த பள்ளிகூடம்
நீச்சல் பழகிய குளம்
சண்டை போட்ட நண்பன்
பள்ளிகூட காதலி
பணியாரம் சுட்டு விற்கும் ராக்காயி பாட்டி
தெருவோர கடை
பள்ளிகூட ஆசிரியர்கள்
மிதிவண்டி ஓட்டி பழகிய குளத்து கரை
கோவில் திருவிழா
அந்த ஓட்டு வீடு

இவை அனைத்தயும் பார்க்க போகும் ஆவலில்
சன்னலோரம் கண்களை மூடியபடி
பழைய நினைவுகளோடு

ஊரு விட்டு ஊரு போனவன்
திரும்புகிறான் சொந்த வீட்டுக்கு
பல வருடங்கள் கழித்து
நம்பிகையுடன்

எழுதியவர் : கனி கிருஷ்ணன் @ ராம கிருஷ் (16-Sep-12, 8:34 am)
பார்வை : 153

மேலே