ஓலை குடிசை,,,,,

ஓலை குடிசை,,,,,

அன்னாடம் வேலை செஞ்சி,,,,
அரைப்படி அரிசி வாங்கி,,,,
ஒரு வேளை கஞ்சி வச்சி,,,
எனக்காண்டி நீ பார்த்தே,,,
வச்ச கஞ்சி ஆறிபோக,,,
நா வர காத்திருந்து,,,
ஊ சென்மந்தோறு,,,பார்த்திருந்த,,,
நாளெல்லா இனி வருமோ,,,,

மழைபேஞ்சி நின்னப்போ,,,,
மயிலே நீ பார்த்தப்போ,,,
மழைதண்ணி ஒழுகிடத்தா,,,
என்னோடு கட்டி நின்னே,,,,
நா உணக்காண்டி காவல் நின்னே,,,

நா பொல்லாத சாமத்துல,,,
ஒத்தையடி பாதையில,,,
ஓடிவர நீ பார்த்து,,,
தவுச்சி நின்ன நாளெல்லா
நெனச்சி பார்த்து ஏங்கி நின்னே,,,,
குடிசை கட்டி கூற நெஞ்சி,,,,
வச்சப்பல்லா நானறியே,,,
மண்விளக்க ஏத்தி வச்சி,,,
நான் தூங்க பார்கையில,,,
ஊ கொலுசு சத்தம் என்ன வந்து,,,
உலுக்குரப்போ,,,கண்மணியே,,,
கடுகா வெடிச்சி நின்னே,,,,
சொர்கமா நெனச்சி நின்னே,,,
நா வாழ்ந்த யே குடிசையத்தா,,

எத்தனையோ சென்மம் போச்சி,,,
சொன்னதெல்லா வீணா போச்சி,,,
யே ஓலைக்குடிசை விரிசலாச்சி,,,
நீ வர காத்து கெடந்து,,,

ஆவியா அலையுரண்டி,,,,
யே உசுரு போன பின்னாலும்,,,
நீ கூட வாழ்ந்த யே குடிசையில,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரன் (16-Sep-12, 12:43 pm)
பார்வை : 371

மேலே