தாகம் தாகம் தாகம்..!!
முட்டி மோதி பார்த்தாலும்
தட்டி வெட்டி வீழ்ந்தாலும்
சுருண்டு விழுந்து செத்தாலும்
வருவதேயில்லை தண்ணீர்...!!
அடித்து நொறுக்கிப் போராடினாலும்
தனிசக்தியாய் எதிர்த்து நின்றாலும்
புதைக்கப் புதைக்கப் பிறந்தாலும்
கிடைக்கவேயில்லை ஓரிடம்...!!
அழியாத கருப்பொருள்கள் தந்தாலும்
அருஞ்சொற்கள் பல இருந்தாலும்
அற்புதத் தனித்துவமாய் வளர்ந்தாலும்
தரவேயில்லை நிகரிடம்...!!
எத்தனையோ எதிரிகள் வந்தாலும்
அழியாத வேக விவேகத்தாலும்
தணியாத குறையாத தாகத்தாலும்
புதியசரித்திரம் நாம்படைப்போம்..!!