எது சுதந்திரம்

தான் உழைத்து சம்பாதிக்கும்
நடுத்தர வர்கத்து மனிதன்
சேர்த்து வைத்த சில்லறையில்
ஆசையோடு வாங்கிய இல்லத்தில்
நிம்மதியாக அமர்ந்தானா ?
எவனோ ஒருவன் செய்த ஊழலில்
பறிபோன தன் சேமிப்பால்
இன்று அவன் தூங்குகிறான் கல்லறையில் !!

எழுத்துக்களோடு வளர்ந்து
மொழியை சுவாசித்து
நாட்டில் நடக்கும் கொடுமைகளால் கொந்தளித்து
தானும் செய்யவேண்டும் புரட்சியை
எழுத்தால் மாற்றவேண்டும்
என் நாட்டின் தலைஎழுத்தை என புறபட்டான்
ஓர் இளைஞன்
எழுதினான் கொடுமைகளை தன் பேனா மையால்
அநீதியர்கள் அழித்தார்கள் வார்த்தைகளை
அவன் உதிரத்தால் !!

பாரதி கண்ட கனவு
பலித்தது இந்த புதுமை பெண்ணால்
சாதிக்க துடித்தாள்
நித்தம் சோதனைகளை மிதித்தாள்
ஜெயித்து நின்றாள்
சொல்ல ஓடிவந்தாள் தன் வீட்டிற்கு
சாலையோரம் நின்றான்
அவள் சேலையை பறித்தான்
இழந்தாள் தன் கற்பை
முடித்துக் கொண்டாள் தன் வாழ்வை!!

இதுதான் நம்நாட்டின் சுதந்திரமா?

ஊழலில்லா சமுதாயமும்
உணர்வை வெளிப்டுத்த வழியும்
தனியே ஒரு பெண் நிம்மதியாய்
தெருவில் நடக்கும் நாளும்

என்று வருமோ
அன்றுதான் நாட்டின் சுதந்திரம்
உண்மையான சுதந்திரம்...

எழுதியவர் : Shravanyaa (18-Sep-12, 6:51 pm)
Tanglish : ethu suthanthiram
பார்வை : 411

மேலே