யதார்த்தம்

உலகில் பெண்விகிதம் அதிகம்தான்
ஆனால் ஆணாதிக்கம்
அதைவிட அதிகம்,
பெண் விடுதலை பேச்சுகள் அதிகம்தான்
ஆனால் அடக்குமுறைகள்
அதைவிட அதிகம்,
பெண்மையை போற்றும் காவியங்கள் அதிகம்தான்
ஆனால் ஹிட்லர் கணவர்களின்
இம்சிப்புகளும் அதிகம்.

ஆண்மையின் அறைகூவல்களில்
நசுங்கிப்போகும் பெண்மை,
ஆண்மைக்காகவே வாழ்ந்து
நொந்துநிற்கும் பெண்குமுறல்கள்,
எத்தனை ஆண்மனதில்
ஆணியடிக்க வேண்டுமோ?

எழுதியவர் : S.Raguvaran (21-Sep-12, 11:50 am)
பார்வை : 154

மேலே