தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ? .

வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா ?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ?
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?
விடியலுக்கு இல்லை தூரம் .விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் ?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் , இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ??

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ??
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ??