நட்பு பற்றி என் பேனா ....!

லட்சம் லட்சமாய்க் கவிஞர்கள்
கோடி கோடியாய் வார்த்தைகளால்
நட்புக்கு குட முழுக்கு
நடத்தி விட்டனர்
நட்பு பற்றி நான் பேச
தமிழ் எனக்களித்த
இரவல் வார்த்தைகள்
நட்பு ,
உறவுகளைத்தாண்டி
பந்தங்களை உடைத்து
எதையும் எதிர்பாராது
அன்பை மட்டும் எதிர்பார்க்கும்
உண்மை அன்பிற்கான
உலக நாடக மேடையின்
உண்மையான கதா பாத்திரம்....!
நட்பின் அறிமுகம்
உனக்கு கிடைக்கும் பட்சம்
மழைத்துளி கூட
உன்னில் பட்டால்
மன்னிப்பொன்று கேட்கும்...!
ஆகாயம் கூட உன்னை
தலைவணங்கிச் செல்லும் ...!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (22-Sep-12, 4:26 pm)
பார்வை : 628

மேலே