அவள் ஒரு அன்னப் பறவை
அன்னப் பறவை என
அவளைச் சொன்னேன்
பாலையும் தண்ணீரையும் போல் - அவள்
நிம்மதியையும் காதலையும்
தனித் தனியாக பிரித்தாள்.......!
காதலை கொடுத்து விட்டு - எனது
நிம்மதியை எடுத்து சென்று விட்டாள்.......
ஏனடி என் கண்ணிலே பட்டுத் தொலைத்தாய்...?!!
சீக்கிரம் வந்து விடு - இல்லையெனில் என்
சிதையினில்தான் நீ தீயிடுவாய்.....!