மாற்றுத் திறனாளிகளுக்கு சமர்ப்பணம்

வாயின்றி மலர் சிரிக்கும்......!
வாலின்றி மனம் தாவும் .......!
காலின்றி நதி நடக்கும் ..........!
கையின்றி காற்று தழுவும் ...!

விரலின்றி காதல் மீட்டும்.....!
விழியின்றி கடவுள் காணும்..!
செவியின்றி மலைஎதிர் ஒலிக்கும்...!
சிறு மூளையின்றி " நான் " என்பதெழும்..!

நாசியின்றி நம்பிக்கை சுவாசிக்கும்...!
நரம்பின்றி தமிழ் மன யாழிசைக்கும்...!
நாவின்றி நினைவு தமிழ் சுவைக்கும்...!
நல்லுயிரின்றி மரத்துண்டு பயன் அளிக்கும்...!

எனவே.......

தேக நிறைவு தேவை இல்லை
தெய்வ குணம் போதுமானது.....!

உள்ளம் ஊனம் இல்லை எனில்
உலகை வெல்ல தடைகள் ஏது...?

மாற்றுத் திறன் படைத்த
மண்ணில் வாழும் தெய்வங்களே..

மனம் பணிந்து வணங்குகிறோம்
மகத்தான சக்தி தாருங்களேன்......!

அனுதாபப் பார்வைகளை
அடித்து நொறுக்கிய அகிம்சா வாதிகளே....

அதிசயித்தே ரசிக்கின்றேன் - உமது
அசத்துகின்ற விஸ்வரூபம் கண்டு.....!

எழுதியவர் : (24-Sep-12, 10:44 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 156

மேலே