விழிகளில் வழிகிறது ரத்தக் கண்ணீர்.......
தின்னு கொளுத்த
திமிர் பிடித்த அரசியல் வாதியே - எமது
தெருவோர ஜனநாயக எலும்புக் கூடுகளை பாரடா..பணக்காரப் பரதேசி........!
பருக்கையை பொறுக்க....
படாத பாடு படுகிறான்......ஒரு சிறுவன்....
சிற்றெறும்பு விரல் கடிக்க.....அவனது
விழிகளில் வழிகிறது ரத்தக் கண்ணீர்.......
நீயோ.....பீரால்....தொந்தி வளர்த்து......
சிக்கன் தின்று சினைப் பன்னியாய்........
உன் எச்சித் தட்டில் வீணாகும் உணவே
ஒருவருட பசி போக்குமடா இவனுக்கு......!
லஞ்சக் கல்லறைக்குள் லயிப்பவனே
சல்லாபங்களில் சந்தோசிப்பவனே........
விவாதம் செய்தபடி வீணாக்காதே
எனது நாட்டின் செல்வத்தை..........
ஓடி வந்து உதவடா.....இவர்களுக்கு ...
நரகத்திலாவது உனக்கு நல்லபெயர் கிடைக்கும்...!