######### மின்மினிப் பூச்சிகள் #########

அடிக்கடி மின்வெட்டு
இரவுகள் பதுக்கிவைத்த
பறந்திடும் பொக்கிஷம்
அழகான தரிசனம்


பிடித்துவிடும் ஆசையிலே
மனமும் பறந்திட கைகளும்
நீண்டுவிட என்வசம் சிக்கிடுவாய்
பொன்னொளி காட்டிடுவாய்


மினுமினுக்கும் உன்னை
கைகளிலே ஏந்திக் கொள்ள
விளக்கேந்திய காரிகையாய்
மாறிடவே வரம் தந்தாய் !!!

எழுதியவர் : (26-Sep-12, 8:26 pm)
பார்வை : 170

மேலே