இறகை விரித்த பறவை

இறகை விரித்த பறவை
இனிய வானத்தை புரிந்து கொண்டது

அன்பினை புரிந்த மனிதன்
அழகிய ஆண்டவனை அறிந்து கொண்டான்

குறுக்கிக் கொள்வது என்பது
குணமில்லை என்றறிந்தான்.......

குதூகலமாய் வாழ்ந்து மகிழ்வதே....
குறையிலா சொர்க்கம் என்றுணர்ந்தான்.....!

எழுதியவர் : (26-Sep-12, 11:23 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 196

மேலே