[342 ] குறு குறுப் பாக்கள் .... (12 )
இப்பொழுதெல்லாம்
மீசையில்
மண் ஓட்டுவதே இல்லை..
ஏனென்றால்
குப்புற விழுவதே இல்லை
குனிவது கூடக் கிடையாது..
அமர்ந்தபடி இரசிக்கும்
அழகைப் பழகிக் கொண்டேன்!
அருகில் எவர் வரினும்
அமைதி காக்கிறேன்
பெருமை என்பது
பேச்சில் மட்டும்தானா?
பேசாதிருப்பதிலும்தான்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தண்ணீரில் தத்தளித்தாலும்
தண்ணீருக்காகத் தத்தளித்தாலும்
கண்ணீரைத் தரக்
காத்திருக்கிறோம்..
விண்ணேறி வாருங்கள்
விரைந்து பேசுவோம் ....
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாளெல்லாம்
இழைத்தார் தன்னை
பூமியில் நல்ல
மரங்கள்
மன்னிக்கவும்
மனிதர்கள்
வளர வேண்டுமென்று...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!