மனம் மரித்தால்…. மரணம் தான்….
மனம் மரித்தால்…. மரணம் தான்….
பேரும், புகழும்
தன்னை
நம்புகிறவனுக்கு
எவரையும்
தேடி சென்று
தெருகோடியில்
நிற்க வேண்டியதில்லை
அது அவன்
பின்னால்
அவன் அறியாமலே
அணிவகுத்து வரும்
நடுத்தெருவில்
நாட்டியம் ஆடினால்
ஊர் கூடி ரசிப்பாரே
தவிர
உடன் வர ஒருவரும்
உடன்படமாட்டார்...
நீ
சிறுமை தனத்தை
சிக்கனம்
காட்டினால்
பிற்காலத்தில்
உன்
நலனுக்கு
எவரும்
உடன் வருவார்கள்.
அதனையும்
இழக்காதே..
விறகெரிந்தால்
கரிக்குதவும்…
மனம் விட்டு போனால்
எல்லாம் மரித்து
போகும்…
மனிதர்களுக்கு
பிறகு
மரணத்தில்
கூட
நிம்மதி கிட்டாது…
வசைபாடுவதை
விட
இசைபாடு…
எல்லாம் கூடி
வரும்…
கவியாக்கம்… மஹாதேவன்