மண் மகளே
உன் மீது கட்டியுள்ள சவக்குழிகள் போதாதென்று
உனக்குள் கல்லறைகள் கட்டிக்கொண்டா யா?
பசியால் குளிரால் நாங்கள் நடுங்கினால்
பசியாலா குளிராலா எதனால் நடுங்குகிறாய் ?
உன்னில் உருவான மனித உயிர்களை
கருணைத் தாயே எதற்காக விழுங்குகிறாய் ?
உன்னை எதற்காக நீயாகத் தின்கிறாய்
மண்மகளே உனக்குக் கூடவா மண்ணாசை ?
உனக்குள் மலைகள் மோதிக் கொண்டனவா !
பாதாள மின்னல்கள் உன்னைக் கீறி விட்டனவா!
மரங்களை விழுங்கினால் பலவித வைரமாக்குவாய் '
பாவம் மனிதர்களை விழுங்கி என்னவாக்குவாய் ?
உன்னை அன்பின் முழுப் பிறப்பிடம் என்கின்றோம்
எனவேதான் உன்னில். இருப்பிடம் கண்டு கொண்டோம்
இறுதியில் உன்னுள்ளில் தான் உறங்கிட வருவோம்
அதற்குள்ளே. உனக்கு ஏனோ இந்த அவசரம்
எதற்காக எதைக் கண்டு இப்படிச் சீறி விழுகின்றாய்
யார் மீது என்ன கோபம் ஏன் இப்படி நாறுகின்றாய்
ஏன் இந்தப் பிணக் குவியல் யாரைத தான் தேடுகிறாய்
யாருக்காக இப்படி குலுங்கிக குலுங்கி அழுகிறாய்
பூமாதே நாங்கள் உன் அருமை செல்லப் பிள்ளைகள்
அடித்தாலும் அணைததாலும் நீ தானே தாய் எமக்கு
அடித்தது போதும் எம்மை அணைத்திட மாட்டாயா ?
கோபம் தொடர்ந்தால் நிலவினில் குடி புகுவோம்!