சிறுவர்கள் நாங்கள் - கே.எஸ்.கலை

நிறுக்கப் படாத வித்தைகள் கொண்ட -
பழுது படாத வித்துக்கள் நாங்கள் !

ஆலம் வித்தாய் அகிலம் வந்தோம் -
ஆயிரம் விருட்ச்சங்கள் அகத்தில் கொண்டோம் !

முழங்காலில் நடந்துக், கொஞ்சம் முதிர்ந்து -
மூளைக் கிளை பரப்பி, முளை விட்ட தளிர்கள் !

வித்தைகள் விதைக்க இடம் கொடுங்கள் – அதை
விற்பனை செய்யவும் இடம் கொடுங்கள் !

சரித்திரம் படைக்க சாலைகள் தேவை -
சாலைகள் தோறும் மாலைகள் தேவை !

மேற்கில் புதைத்தால் கிழக்கில் பிறக்கும் -
பகலவன் போன்ற சிறுவர்கள் நாங்கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (1-Oct-12, 7:59 am)
பார்வை : 400

மேலே