கூலைக் கும்பிடு!

வாடாதே ஒருபோதும்
வாடினாலும் விட்டுப்போகாது மரணம்!
மண்ணில் பிறந்த அனைத்து உயிருக்கும்
மரணமென்பது வந்தே தீரும்
மானிடராய் பிறந்த நமக்கும்
மரணமென்பது முடிவான கணக்கு
மண்மீது வாழும் நாட்கள்
மகத்துவமான ஆனந்தங்கள்
எண்ணிக்கையின் அடிப்படையிலேயே
எழுதப்பட்டுள்ளது நமது வாழ்நாட்கள்
கூள்குடித்து வாழும்போது
வராத நோய்கள் யாவும்
கோடிகள் வந்து சேரும்போது
கொடுக்கல்போல் வந்து சேரும்
கோடிகொடுத்து தடுத்தால் கூட
கூலைக் கும்பிடு போட்டு
போகாது மரணம்.