மு.க.வுக்கு கருப்பு சட்டையை போட்டு அழகு பார்த்த ஜெ.அம்மையார்..?! பழைய நினைவுகளை மேய விட்டுள்ளார் ஜெ. அம்மையார் என்று கருதலாமா..? ஈழதேசம் பார்வையில்..!

யாருக்கு..? தமிழ், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ் இலக்கியம், திராவிட இயக்கத்தின் விடுதலை நாளிதழ், திராவிடர் கழகம், என்று பழைய அனுபவங்களை கிண்டி கிளற வைத்துள்ளார் ஜெ. அம்மையார் என்று கருதலாமா..? மஞ்சள் துண்டு என்று இருந்தவரை எப்படி கருப்பு சட்டை போட வைத்துள்ளார் ஜெ அம்மையார்..? இதில் ஏதும் இருவரின் உள்குத்து இருக்குமோ..? இருக்கலாம் யார் கண்டது..!

அணைத்து விதத்திலும் அதிமுக அரசு செயல் இழந்து விட்டதை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, ஊர்வலம் செல்ல தயாராக இருக்கும் பொழுது ஜெ.அம்மையார் அரசு, மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது. அறிவாலயத்தில் இருந்து, அதன் வழிகாட்டிகள் சார்பாக மூன்று வழிகளில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று இன்று மதியம் வரை அடித்துச் சொன்னார்கள்.

ஏதாவது ஒருவழியில் இந்த சங்கிலி போராட்டம் நடைபெற அனுமதி கிடைக்கும் என்று இருந்த நிலையில், ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை..? ஒருவேளை இந்த பசில் ராஜபக்சே அவர்களின் சவாலும், இலங்கை ராணுவ தளபைதி ஜெகத் ஜெயசூரிய அவர்களின் வீர உரையும் திமுக வின் தலைவர் முக அவர்களை கடுமையாக அல்ல சற்று லேசாக அசைக்க, அ தி மு க வின் தலைவர் ஜெ அம்மையாரையும் சற்று அசைக்க, அட..என்னங்கப்பா..! இந்த தமிழ் பேசும் அமைப்புகள் குரல் கொடுத்து, இந்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று புலம்பி, மு க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மு க வும், ஜெ அம்மையாரும் ஏன் ஒரு கூட்டு நடவடிக்கையை அதாவது ஒரு டீம் போட்டு வேலை செய்திருக்கக் கூடாது என்கிறார்கள் கோபால புர மக்கள்..?

இவை எல்லாவற்றையும் விட்டு விடுவோம்..? மஞ்சள் துண்டை போர்த்திக் கொண்டு என்ன தகிடு தத்தங்கள் செய்தீர்கள்..? தஞ்சை ராஜ ராஜ மன்னரின் கோவிலுக்கு பின் புற வாசல் வழியாக, பதுங்கி பதுங்கி சென்றீர்கள்..? லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது, மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றீர்கள்..? அந்தோ பரிதாபம்..! உங்களுக்கு, நீங்கள் ஒருபோதும் விரும்பாத உங்களின் பழைய நினைவுகளை, அதாவது திருட்டு ரயில் ஏறி, சென்னை வந்ததின் அடையாளத்தை போட்டு அழகு பார்த்து விட்டார் ஜெ.அம்மையார் என்றால் எந்த உடன் பிறப்பாவது மறுக்க முடியுமா என்ன..!

கருப்பு சட்டையை உங்களின் டீன் ஏஜ் வயதில் அணிந்து இருந்தீர்கள்.. முற்பது வயதிற்குள் அணிந்திருப்பீர்கள்..! தற்பொழுது கல்லறை காண்டத்தில் இருக்கிறீர்கள்..! நீங்கள் எப்பொழுதாவது நினைத்து உண்டா..? நாம் மறுபடியும் கருப்பு சட்டை அணிவோம் என்று..! அய்யோ..அய்யோ..கொல்றாங்களே..! என்ற சத்தமும், முரசொலி மாறனின் வேட்டியை உறுவி, வெறும் டவுசரோடு நிற்கும் பொழுது

கூட நீங்கள் கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று நினைத்ததில்லை..! அதைத்தான் சொல்வது, மக்களுக்கு எதிரானவர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விடும் என்றால் கும்பினி அரசு ஏன் சூரியன் உதித்து மறையும் எல்லா நாடுகளையும் இழக்க வேண்டும்..?

ஒரு லட்சம் ஆவிகள் தனுஷ்கோடி கடலில் உயிருடன் உலவுகின்றன..என்று நன்றாக தெரியும் உங்களுக்கு..அல்லது தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கலாம்..! எப்பொழுது கருப்பு சட்டை போடுகிறீர்கள்..? உங்களின் இந்த கருப்பு சட்டைக்குப் பின்னால் அணைத்து தேசிய கட்சிகளும் இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்..! நன்றாக ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் உலகமயமாத அரசியலை கையில் எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறீர்கள்..? நீங்க விளையாடும் விளையாட்டு தமிழகம் மட்டும் சார்ந்தது அல்ல..! எனவே நீங்கள் ஆடும் களம் மிகப் பெரிது..நீங்களோ முதியவர். உங்களின் களம் தமிழ் நாடு மற்றும் இந்தியா..! சர்வதேச களத்தில் நீங்கள் நிற்கும் பலத்தை இழந்து விட்டீர்கள் என்றே கருதலாம்..!

நீங்கள் முடக்கப்பட்டு கட்டிலில் சாய்வு நாற்காலியில் படுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் உங்களின் அரசியல் எதிரிகள்..? ஏனென்றால் உங்களுக்கு வயது தான் பெரிய பிரச்சனை. ஆமாம் யார் உங்களின் அரசியல் எதிரிகள்..? அதை கண்டு பிடிக்க வேண்டுமாயின் வேதாளம் கதை சொல்லும் பாணிக்கு திரும்ப வேண்டும் என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (4-Oct-12, 10:18 pm)
பார்வை : 183

சிறந்த கட்டுரைகள்

மேலே