பொன்மாலை பொழுதினிலே !
பூவிதழ்கள் உதிர்ந்து உயிர்துறக்கும் நேரம் !
இறை தேடிய பறவைகள்
கிளைகளில் இளைபரும்நேரம் !
இளம்கன்றின் பசிக்கு கறவைகள் பாலுட்டும் நேரம் !
ஏர் உழுத காளைகள் மனை சேரும்நேரம்!
மலைகளின் இடையினில் கதிரவன்
கண் மறையும் நேரம் !
இளம் பிறை நிலவு முடிசூடும் நேரம் !
நட்சத்திரங்கள் வானில் பாய்விரிக்கும் நேரம் !
வயலில் தவளைகளின் கானங்கள்பாடும்!
மார்கழி மாதத்திலும் உடல் கனலாகும் நேரம் !
இரு உடல்கள் இணைந்து மூன்றாக்கும் நேரம் !