ஆரோக்கியமான நட்பே அழியாச் செல்வம்
நட்பே
உள்ளத்து வேதனைகள்
உனையன்றிக் கேட்க
வேறெவரும் இல்லை
நட்பே
என் துக்கங்களில்
பங்கெடுக்கும் துணிச்சல்
நீயின்றி யாருமில்லை
நட்பே
உறவுகள் கண்டு
உடையும் நெஞ்சைப்
பழுது பார்க்கும் - உன்
திறன் எங்கேயும் இல்லை
நட்பே
முயற்சிகள் முக்தியடைய
முழுநீள ஆதரவாகிவிடும்
உறுதுணை உன் போல் இல்லை
நட்பே
என்னைப் பிடித்துவிடும்
தடுமாற்றமெனும் பிணி
நீக்கும் மருந்து - உன்
வார்த்தைகளின்றி ஏதும் இல்லை