நட்பின் சின்னம் -தேன்மொழி

தோள்கொடுக்கும் தோழனே
துவண்டுவிடாதே

நம் நட்பின் ஆழம் சமுத்திரத்தையும்
கடந்தது

உனக்கும் எனக்கும் உள்ள உறவு
இவ்வுலகம் தோன்றும் போதே
தோன்றிய முதல் உறவுதான்

காதலின் சின்னமாக
ஒரே ஒரு "தாஜ்மஹால்"
மட்டும் தான் உண்டு

நம் நட்பின் சின்னமாக

நீதான் என் நண்பன்
உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
உயிருள்ள வரை உறவாக
தோள்கொடுக்கும் தோழனாக

ஊர் போற்றும் உறவாக
பெரியோர் வாழ்த்தும் பண்பாக

நினைவு தெரிந்ததிலிருந்து
கிடைக்கும் வரமாக

நட்பின் சின்னம் இதுமட்டும் அல்ல ..........
வாழ்வின் பாதி
உயிரின் மீதி
உணர்வாக
உரிமையாக
அரவணைக்கும் அன்னையாக
பண்பாக அன்பாக
இதுமட்டும் நட்பின் சின்னமில்லை
முடிவில்லாத ஒரு முடிவுரை
தொடரும் நட்பின் சின்னம்.................

எழுதியவர் : தேன்மொழி (11-Oct-12, 12:53 am)
பார்வை : 436

மேலே